11 ஆண்டுக்கு முன் மனைவியை கொன்ற கணவனை கொக்கி போட்டு தூக்கிய போலீஸ் | Thanthitv
- திருப்பூர் மாவட்டம் குருப்பநாயக்கன்பாளையத்தில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொன்ற கணவர் 11 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்த தனிப்படை போலீசாருக்கு, கொலையாளி டெல்லி நஜபகர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அங்கு விரைந்த தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் ஷா என்பவரை கைது செய்தனர். டெல்லியில் இருந்து தாராபுரம் அழைத்துவரப்பட்ட கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story