திருப்பூர் பெண் கொடூர பலாத்கார கொலை.. வடமாநில நபருக்கு சாகும் வரை மறக்காத தண்டனை கொடுத்த கோர்ட்

x

திருப்பூரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வடமாநில தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கயம் கரிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த பெண் கடந்த 2022 செப்டம்பரில் பி.ஏ. பி. வாய்க்கால் அருகே புதருக்குள் சடலமாகக் கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலை தொழிலாளியான ஒடிசாவைச் சேர்ந்த உமேஷ் ரிஷிதேவ் அப்பெண்ணைத் தாக்கி பலாத்காரம் செய்து தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது தெரிய வந்தது. உமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்