திடீரென வந்த தகவல் - தனியார் பள்ளிக்கு 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிவறைகள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, இன்றும் நாளையும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.
Next Story