கண்முன்னே திடீரென கருகிய நெற்பயிர்கள்... எதிர்பாரா விவசாயிகளுக்கு பேரிடி

x

கண்முன்னே திடீரென கருகிய நெற்பயிர்கள்... எதிர்பாரா விவசாயிகளுக்கு பேரிடி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில், ஆலோசனைக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடையில் வாங்கிய களைக்கொல்லி மருந்தால், நடவு செய்த சில நாட்களிலேயே நெற்பயிர்கள் கருகி சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு ஜோத்தம்பட்டியில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மதியம் 12 மணியாகியும் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். ஒரு சிலர் கூட்டத்தை புறக்கணித்துச் சென்ற நிலையில், தாமதமாக வந்த அதிகாரிகள், இழப்பீடு வழங்குவது குறித்து பேசாமல், இனி வரும் காலங்களில் சாகுபடி செய்வது குறித்து பேசினார்கள். இதனால் கோபமடைந்த விவசாயிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்