இரவோடு இரவாக திடீர் மாற்றம்... விடிந்து பார்த்து அதிர்ந்த மக்கள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே கீழ்பவானி பாசனக் கிளை வாய்க்காலில் அனுமதியின்றி இரவோடு இரவாக பாலம் கட்டிய வீட்டுமனை விற்பனை உரிமையாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்தூரை அடுத்த பொன்னாபுரத்தில் சாலைக்கு தென்புறம் 3 ஏக்கர் கீழ்பவானி பாசன நிலத்தை வீட்டு மனை பிரிவாக மாற்ற அரசு அங்கீகாரம் பெறுவதற்கு நிலத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள வாய்க்காலில் பாலம் அமைத்துள்ளனர். இதனால் விவசாயமும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் சூழலில், வீட்டு மனை விற்பனை உரிமையாளர்கள் மீதும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story