மரத்தில் இருந்து ஆணியை அகற்றியதும் வடிந்த `கண்ணீர்’ - வியந்த மக்கள்..
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளகோவில் மூலனூர் சாலையில் உள்ள சுமார் 8 வயதுடைய மரத்தில், ஆழமான ஆணிகள் அடித்து விளம்பர போர்டு மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இதை தன்னார்வ அமைப்பினர் அகற்றியபோது, ஒரு ஆணி அகற்றப்பட்ட துளையிலிருந்து சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடிந்தது. இது அப்பகுதி மக்களை ஆச்சரியமடைய செய்த நிலையில், மரத்தில் வடிந்தது தண்ணீராக தெரியவில்லை என்றும், அதன் கண்ணீர் போல் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் சாலையோர மரங்களில் ஆணிகள் அடிப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story