சாலை விபத்து என நினைத்த போலீஸ்.. போஸ்ட்மார்ட்டத்தில் அவிழ்ந்த மர்மம்

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே

சொத்துக்காக தம்பியை கொலை செய்துவிட்டு நண்பருடன் சேர்ந்து விபத்து போல் நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணன் விவேக்கிற்கும் தம்பி அசோக்கிற்கும்சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி பைக்கில் சென்ற அசோக் குட்டகம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனையில் அசோக்

தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அண்ணன் விவேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,

இரும்பு கம்பியால் அசோக்கை தலையில் பலமாக விவேக் தாக்கி கொலை செய்து, விவேக்கின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் உதவியுடன் சரக்கு ஆட்டோவில் அசோக்கின் உடல் மற்றும் டூவீலரை எடுத்து வந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு விபத்து போல

நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து , இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்