திருப்பூரில் சுங்கச்சாவடி விவகாரம்..! 2 வருட போராட்டத்துக்கு முடிவு கட்டிய கலெக்டர் | Tiruppur
அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை 32 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து இந்த கட்டிடத்தை இடிக்க கோரி இரண்டு வருடங்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுங்கச்சாவடி திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் மீண்டும் சுங்கச்சாவடியை திறக்க உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மற்றும் வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியின் ஒரு பகுதி இடிக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.