புதிய பேருந்து நிலையத்தின் அவலம் "குடிகாரர்களின் கூடாரமா?" - பொதுமக்கள் பரபரப்பு புகார்..
திருப்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து
நிலையம் போதிய பயன்பாடு இன்றி பொலிவிழந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூரில் 31.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அங்கிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டமின்றி புதிய பேருந்து நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு லிப்ட் உள்ளிட்டவை பராமரிப்பின்றி பாழடைந்துள்ளன. இரவில் குடித்து விட்டு படுப்பவர்களின் கூடாரமாக புதிய பேருந்து நிலையம் திகழ்வதாகவும், இதனை தடுத்து கூடுதல் பேருந்துக்களை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கி அதிக பயணிகள் வந்து செல்லும் இடமாக்க புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.