திடீரென நடத்துனர் மீது சுத்தியலால் கொடூரமாக தக்கிய நபர்..- பின்னணியில் மனைவியின் போன் கால்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை - கணியூர் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் இஸ்மாயில் என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், பேருந்தில் ஏறிய மருள்பட்டியை சேர்ந்த கார்த்தி என்பவர் திடீரென மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து இஸ்மாயிலை தாக்கியுள்ளார். இதில் தொடை, அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட தடுமாறி விழுந்த இஸ்மாயில் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். பேருந்தில் பயணம் செய்தவர்கள் இஸ்மாயிலை காப்பாற்றியவர் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை கைது விசாரணையை தொடங்கினர். கார்த்தியின் மனைவியிடம் இஸ்மாயில் தொலைபேசியில் தொடர்ந்து பேசி பழகியதால், சந்தேகம் அடைந்து இஸ்மாயிலை தாக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
Next Story