நூற்பாலைக்குள் சிதறிய தீப்பொறி.. - நள்ளிரவில் கருகிய பஞ்சு பேல்கள்..

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று நள்ளிரவில் மின் கசிவு காரணமாக, பஞ்சு பேல்கள் இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அதிகாலை மூன்று மணிக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 4 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் பேல்கள் எரிந்து சேதம் ஆனதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்