பச்சிளம் குழந்தையின் கை அகற்றம் - மருத்துவர்கள் மீது பரபரப்பு புகார்
திருப்பூரில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர்கள், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். கடந்த 13-ம் தேதி, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவிநாசியை சேர்ந்த தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சில நிமிடங்களில் குழந்தையின் கையில் இரத்த கட்டு போன்று ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்படி அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தாமதமாக வந்ததால் குழந்தையின் கையை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினர்கள் மனு அளித்தனர்.