பட்டப்பகலில் நடந்த கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சி - திருப்பூரில் அதிர்ச்சி | CCTV | TN Police | Tiruppur
திருப்பூர் அருகே பட்டப்பகலில் ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர், இன்று காலை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் இருந்து இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, தனது பைக்கின் சீட்டுக்கு அடியில் வைத்து பூட்டி உள்ளார். சண்முகம் அருகில் இருந்த கடைக்கு சென்றதை நோட்டமிட்ட 6 பேர் கும்பல், பைக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story