ரத்த வெள்ளத்தில் தம்பதி... சிக்கிய நபர்.. - அதிரும் அவிநாசி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, வயது முதிர்ந்த விவசாய தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊஞ்சபாளையம் பெரிய தோட்டம் பகுதியில், தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த 80 வயதான பழனிச்சாமி என்பவரும், 70 வயதுடைய அவரது மனைவி பர்வதமும் கொல்லப்பட்டனர். உடல்களை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கிரிஷ் யாதவ் ஆய்வு செய்தார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட பழனிசாமியின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Next Story