"ஊர் விட்டு ஊர் வந்து..." - கொடூரமாக தாக்கிய பெண்கள் - ரத்தம் சொட்ட கதறிய பானி பூரி வியாபாரி

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பானிபூரி வியாபாரியை, 8 பேர் சேர்ந்து தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காயம் அடுத்த முல்லை கிராமத்தை சேர்ந்த திருப்பதி, பானி பூரி வியாபாரம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்குள்ள ஒரு ஊராட்சி கடையை வாடகைக்கு ஏலம் எடுத்ததில் சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த திருப்பதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தன்னை ரமேஷ், 3 பெண்கள் உட்பட 8 பேர் சேர்ந்து தாக்கியதாக திருப்பதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்