"காலைல உயிரோட இருந்த குழந்தை... பிறக்கும் போது இதய துடிப்பு எப்படி நின்றது?" - கதறிய உறவினர்கள்

x

திருப்பத்தூரில் கர்ப்பிணிக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நார்சம்பட்டியை சேர்ந்த விஷாலினி என்ற கர்ப்பிணி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே குழந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பிரசவ வலி அதிகமான பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், பச்சிளம் குழந்தையின் உடலை உறவினர்கள் தூக்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்