வயிற்று வலியால் துடித்த 13 வயது மகள்... டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்த பெற்றோருக்கு பேரிடி
திருப்பத்தூர் அருகே கத்தி முனையில் மிரட்டி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் காங்கனைக்குட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், மாந்தோப்பில் கத்தி முனையில் மிரட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார், இதையடுத்து, சிறுமியின் தாயார் கவிதாபாய் கொடுத்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயபிரகாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தாவின் பரிந்துரையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவின்பேரில் ஜெயப்பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.