சட்டவிரோதமாக கருக்கலைப்பு... திருப்பத்தூரில் உலா வந்த போலி மருத்துவ தம்பதியை தட்டி தூக்கிய போலீஸ்
திருப்பத்தூரில் முறையாக மருத்துவமே படிக்காமல் கிளினிக்கில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவ தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் அவருடைய மனைவி சுமங்கலி ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமலேயே துணிகரமாக திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர்... இங்கு சட்ட விரோதமாக கரு கலைப்பு நடைபெறுவதாக திருப்பத்தூர் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகிக்கு தகவல் கிடைத்துள்ளது... உடனடியாக அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமங்கலி குற்றத்தை ஒப்புக் கொண்டார்... இதன் காரணமாக கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்களுக்கு சட்டவிரோதமாக கரு கலைப்பு செய்து வந்த சுமங்கலி மற்றும் அவருடைய கணவர் சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்... மேலும் அவர்களின் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது...