2 கள்ள காதலர்கள் மாறி மாறி உடலுறவு.. மயங்கி உயிரிழந்த பெண்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, வீட்டில் பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அடித்து துன்புறுத்தி கழுத்தை நெரித்து வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சந்திரபுரம் பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவா, தனது மனைவி சந்தியாவை தனியாக வீட்டில் விட்டுவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 11ம் தேதி, சந்தியா சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தியாவின் தொலைபேசியை ஆராய்ந்து, அதன்பேரில் விக்னேஷ் மற்றும் குமரேசனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. குமரேசனும், சந்தியாவும் கடந்த 7 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்ததும், குமரேசன் சிங்கப்பூர் சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சந்தியா தகாத உறவில் இருந்ததும் தெரியவந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமரேசன் சொந்த ஊர் திரும்பிய நிலையில், விக்னேஷ் உடனான தகாத உறவு பற்றி அறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10ம் தேதி இரவு, வீட்டில் தனியாக இருந்த சந்தியாவை கழுத்தை நெரித்து குமரேசன் வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதால் சந்தியா மயக்கமடைந்த நிலையில் குமரேசன் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் அங்கு வந்த விக்னேஷ், சந்தியாவை அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ் மற்றும் குமரேசனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.