அரசு பள்ளி சுவர் இடிப்பு..! பதறியடித்து ஓடிவந்து தடுத்த எம்.எல்.ஏ.. திருப்பத்தூரில் பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பத்தில், அரசினர் உயர்நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்துவிட்டு, பயணியர் நிழற் கூடம் அமைக்கும் பணிகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் தொடங்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சுற்றுச்சுவரை இடிப்பதை தடுத்து நிறுத்தினார். பின்னர் சுற்று சுவர் இடித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, பொதுமக்கள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்