ஓவர் ஸ்பீடில் வீட்டிற்குள் புகுந்த கார் - அலறி அடித்து ஓடிய மக்கள்.. திக் திக் சிசிடிவி காட்சி
ஓவர் ஸ்பீடில் வீட்டிற்குள் புகுந்த கார் - அலறி அடித்து ஓடிய மக்கள்.. திக் திக் சிசிடிவி காட்சி
திருப்பத்தூர் ஏலகிரி மலை பொன்னேரி பகுதியில் அதிவேகமாக சென்ற கார் வீட்டுக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த கௌதமுக்கு சொந்தமான காரை காமராஜ் நகரைச் சேர்ந்த தீனா என்பவர் எடுத்துக் கொண்டு தன் நண்பர்களனா பார்த்திபன், ஹரிஷ் குமார், ராகுலுடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்... அங்கிருந்து வீடு திரும்பும்போது பொன்னேரி கூட்டு சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையருகில் இருந்த இளங்கோ என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது... இதில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கதவு சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் காட்சிகளைக் காணலாம்...