ஸ்பாவில் விபச்சாரம்..? உலுக்கிய பெண்கள்.. வழுக்கிய போலீஸ்.. அதிர்ச்சியில் DSP

x

திருப்பத்தூரில் ஸ்பாவில் திடீர் ரெய்டு நடைபெற்ற போது, மாடியில் இருந்து காவலர் ஒருவர் விழுந்து காயமடைந்துள்ளார். திருப்பத்தூரில் இயங்கி வரும் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, டிஎஸ்பி தலைமையில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அதே நேரத்தில், மொட்டை மாடியில் யாராவது ஒழிந்துள்ளனரா? என்று பார்க்க ஜெகன் என்ற காவலர் சென்றுள்ளார். அப்போது, கால் தவறி, காவலர் ஜெகன் கீழே விழுந்த‌தாக கூறப்படுகிறது. இதனால், பதறிபோன மற்ற போலீசார், ரெய்டு நடத்தாமல், அவசர அவசரமாக டிஎஸ்பியின் வாகனத்தில் காவலரை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது ஸ்பாவில் இருந்த பெண்கள், ஏஜென்ட் உள்ளிட்டோர் சென்டரை மூடிவிட்டு தப்பியோடினர்.


Next Story

மேலும் செய்திகள்