மக்களுக்கு வந்த எச்சரிக்கை..யாரும் திருச்செந்தூர் வரவேண்டாம்..எதிர்பாரா நேரம் முக்கிய அறிவிப்பு

x

மழை, வெள்ள சூழலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு வருகை தருவதை இன்றும், நாளையும் தவிர்க்குமாறு வெளியூர் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல் வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் சாலைகளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள ஆட்சியர், இன்றும், நாளையும் வெளியூர் பொதுமக்கள் செந்திலாண்டவர் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்