திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மாற்றம்..பயந்து போய் மக்கள் வைத்த கோரிக்கை..Tiruchendur
திருச்செந்தூரில் காணப்படும் மணல் பாறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில நாட்களாக மணல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி தூரத்திற்கு மணல் பாறைகள் தென்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடலில் புனித நீராட சிரமப்படும் பக்தர்கள், மணல் அரிப்பு மற்றும் மணல் பாறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story