"ஒரே போன் கால்..." - போராடிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

x

திருச்செந்தூர் அருகே பேருந்து வசதி கேட்டு பொது மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அ.கோபாலபுரம் பகுதிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழா ஒன்றிற்காக வருகை தந்திருந்தார். இந்த நிலையில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, 5ம் எண் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், நிறுத்தப்பட்ட பேருந்தை நாளை முதல் இயக்க வழிவகை செய்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்