டிக் டாக்கில் வீடியோ - 15 வயது மகளையே கொடூரமாக கொன்ற தந்தை | Tiktok | Pakistan | Viral Videos

x

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி டிக் டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டதாகக் கூறி தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் குடும்பம் வசித்து வந்த நிலையில், தந்தையின் எச்சரிக்கையையும் மீறி 15 வயது சிறுமி தொடர்ந்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதாகத் தெரிகிறது. இந்த சூழலில், அவர்கள் கடந்த 15ம் தேதி பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்த போது சிறுமியின் தந்தை தனது மகளை மைத்துனருடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்