SI-யை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்.. தூத்துக்குடியில் பயங்கரம்
தூத்துக்குடி போல்டன் புரம் பகுதியில் கக்கன் பூங்காவில் வைத்து மது அருந்தியவர்களை தட்டி கேட்ட உதவி ஆய்வாளர் பெஞ்சமீனை கத்தியால் தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்தியால் தாக்க வந்தவர்களை தடுத்த போது பெஞ்சமீனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் போல்டன் புரத்தைச் சேர்ந்த எபனேசர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அண்ணாமலை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story