தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவம் - முத்துநகர் விரைவு ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்மநபர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், ரயில்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்வதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்றிரவு சென்னை சென்ற முத்துநகர் விரைவு ரயில் மீது மீளவிட்டான் பகுதி அருகே மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்த நிலையில், பயணிகள் காயமின்றி தப்பினர். இதேபோல், சில தினங்களுக்கு முன் சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அச்சமடைந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story