வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்.. மாவட்ட எஸ்.பி அதிரடி | TN Police

x

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில், பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த, தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன், தெற்கு ஆத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அந்த பெண்ணின் வீட்டு கண்ணாடியை சரவணன் உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில், மீண்டும் அவர் வீட்டிற்கு மது போதையில் சென்று, புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மீண்டும் புகார் அளிக்கவே, சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்