கெத்து காட்ட மாணவிகள் முன்பு பைக் வீலிங்.. கடைசியில் போலீஸ் செய்த தரமான சம்பவம்
தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, மாணவிகள் முன்பு கெத்து காட்ட கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரிக்கு வெளியே வந்த மாணவர்கள் தங்கள் பைக்குகளில் பொருத்தி இருந்த அதிக ஒலி மற்றும் புகையை ஏற்படுத்தும் சைலன்சர்கள் மூலம் ஒலி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 பைக்குகளை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Next Story