தடபுடலாக நடந்த "அசைவ சமத்துவ விருந்து" - தூத்துக்குடியில் அசத்திய இஸ்லாமியர்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற அசைவ சமத்துவ விருந்தில், அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர். அரியநாயகிபுரம் கிராமத்தில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் "அசைவ சமத்துவ விருந்து" வழங்கினர். இதில், சுமார் 25 கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு உணவருந்தினர். மேலும், கந்தூரி திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, அரியநாயகிபுரத்தில் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்