சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொடூரமாக கொன்ற இளைஞர் - தூத்துக்குடியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வசித்து வந்த 7 வயது சிறுவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார். 2ஆம் வகுப்பு படித்து வந்த அச்சிறுவர், கடந்த 10ஆம் தேதி காய்ச்சலால் பள்ளி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மீன்பிடி தொழில் செய்து வந்த பெற்றோர், வேலைக்கு சென்றதை அடுத்து சிறுவர் வீட்டில் தனியே இருந்திருக்கிறார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 19 வயது இளைஞரான அற்புத ரகசியம் என்பவர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், சிறுவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், இதனால் கத்தி கூச்சலிட்டு சிறுவரை கத்தியால் குத்தி கொன்றதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலைமுடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகனின் சடலத்தை கண்டு கதறி அழுத நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.