லாட்ஜில் போதையில் 5 மாணவிகள்..ஊற்றி கொடுத்து சல்லாப ஆட்டம்-செய்ய கூடாததை செய்த PT சார் | Thoothukudi
லாட்ஜில் போதையில் 5 மாணவிகள்..ஊற்றி கொடுத்து சல்லாப ஆட்டம்-செய்ய கூடாததை செய்த PT சார்.. மூடி மறைத்த தனியார் பள்ளிக்கு ஷாக் - வாய் திறக்காமல் இருக்க போட்ட `கொக்கி’ | Thoothukudi
மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்காக வந்திருந்த பள்ளி மாணவிகளுக்கு, மது வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டல் செய்துவிட்டு கோவையில் பதுங்கிய உடற்கல்வி ஆசிரியர் பிடிபட்டது எப்படி? இது குறித்து பார்க்கலாம்.. விரிவாக..
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகளை, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக, அழைத்துச் சென்றபோது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுமார் 500-க்கும் மேற்பட்டோர் படிக்கும் இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.. இவர் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி விளையாட்டுப் போட்டிக்காக 5 மாணவிகளை அழைத்துச் சென்று தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாணவிகளை தங்க வைத்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொன்சிங், அங்கு மாணவிகளுக்கு மது வாங்கி விருந்து படைத்திருக்கிறார். அத்தோடு, சில மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டிருக்கிறார், இந்த பொன்சிங்...
தொடர்ந்து, இது குறித்து வீட்டில் யாரும் வாய் திறக்கக் கூடாது எனவும் மாணவிகளை மிரட்டி வந்திருக்கிறார்.. இதனிடையே, ஒருவழியாக நடந்தவற்றை எல்லாம் பெற்றோரிடம் மாணவிகள் கூறியிருக்கிறார்கள்.. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பின்னர், பள்ளியில் சென்று வாக்குவாதத்தில், ஈடுபட்ட பெற்றோர் உள்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியின் முன்பாக போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்..
இதனால், பள்ளியில் பதற்றம் அதிகரிக்கவே, அந்தப் பகுதி மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனிடையே டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பிறகு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவிட்லின் மற்றும் பள்ளி செயலர் செய்யது அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.
இப்படியாக, பூதாகரமான இந்த விவகாரத்தில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை வலைவீசித் தேடிவந்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்யக்கூடாததை எல்லாம் செய்துவிட்டு, கோவையில் உறவினர் வீட்டில் பொன்சிங் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், கோவை விரைந்த தனிப்படை போலீசார், பொன்சிங்கை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்திருக்கின்றனர்..
இந்த சூழலில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பள்ளி செயலர் செய்யது அகமது நெஞ்சுவலி காரணமாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கு மது விருந்துடன் பாலியல் சீண்டல் அளித்த விவகாரத்தில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.