5 முறை அடித்த PT சார்... சிறுவனின் காது ஜவ்வு பாதிப்பு - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

x

கோவில்பட்டியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர்... சட்டையை சரியாக டக் இன் செய்ய வில்லை எனக்கூறி உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி - எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உடற்கல்வி வகுப்பின் போது விளையாட்டு மைதானத்திற்கு சென்ற சிறுவனை, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் சட்டையை ஒழுங்காக டக் இன் செய்யவில்லை எனக்கூறி கன்னத்தில் 5 முறை அறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வகுப்பறையில் அழுது கொண்டே இருந்த மாணவர், காது வலிப்பதாக தெரிவித்ததையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, கோவில் பட்டி அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவனின் காது ஜவ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்