வெறியாட்டம் ஆடிய மழைக்கு பிறகு மருத்துவமனையில் தலைகீழாக மாறிய காட்சிகள் | Thoothukudi | Rain
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2வது நாளாக குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்... மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. மனநலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் உள்ளே புகுந்து நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மழை பெய்யாத போதிலும் மழைநீர் வடியாததால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அந்த தேங்கிய மழைநீரிலேயே நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மழை நீரை வெளியேற்ற ஒரு மோட்டார் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில் மற்ற மோட்டார்கள் இயக்கப்படாததால் மழை நீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி கிடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Next Story