தமிழக பெண்களுக்கு ஜப்பான் அரசு கொடுக்கும் ஜாக்பாட் - சாதித்து காட்டிய இந்த தமிழச்சி விஜயலட்சுமி

x

தூத்துக்குடியை சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர், ஜப்பான் நாட்டுக்கு சென்று, ஜப்பானியர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி கருப்பசாமி. விவசாய குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரியான இவர், 12 -ஆம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே கல்வி பயின்றுள்ளார். சுயமாக தொழில் செய்து சாதிக்க நினைத்த விஜயலட்சுமி, எனர்ஜி ஆடிட்டிங் என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் ஆன்லைன் மூலம் ஜப்பானியர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் கற்றுத் தந்தபோது, ஜப்பான் அரசு சிறப்பு விசா வழங்கி அழைப்பு விடுத்த‌து. இதையடுத்து, ஜப்பானில் உள்ள ஓகாய்டோ மாகாணத்தில் உள்ள சப்போரா நகர் சென்ற விஜயலட்சுமி கருப்புசாமி, ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தொடங்கி, ஜப்பானியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். அவருடைய திறமையை பார்த்த ஜப்பான் அரசு, பிசினஸ் மேனேஜர் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. பெண்கள் ஜப்பான் வந்து தொழில் துவங்கலாம் என்ற விஜயலட்சுமி கருப்பசாமி, இதற்காக ஜப்பான் அரசாங்கம் நிதி உதவி அளிப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்