பெரும் கவலையில் மீனவர்கள் | Fish | thoothukudi
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது...கார்த்திகை பிறந்ததால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் துவங்கினர்... இதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்தது... மீன்கள் விலையும் சற்று குறைந்தது. வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சீலா மீன்கள் இன்று ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனையானது. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விளைமீன் 350 ரூபாய்க்கும், ஊலி மீன், பாறை மீன் 300 ரூபாய்க்கும் விற்பனையானது... சாலை ஒரு கூடை 700 ரூபாய் வரையிலும், வங்கனை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையிலும், வாலை மீன் கிலோ 120 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டது... மழையால் குறைவாகவே நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், இப்போது மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.