தூங்கி கொண்டிருந்த மகனை மண் வெட்டியால் வெட்டி கூறுபோட்ட தந்தை - அதிர்ச்சி காரணம்
தூங்கி கொண்டிருந்த மகனை மண் வெட்டியால் வெட்டி கூறுபோட்ட தந்தை - அதிர்ச்சி காரணம்
தோணுகால் மேல தெருவைச் சேர்ந்த பிரியாதனுக்கும் அவரது மகன் பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது... பாலமுருகனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருவரும் தூங்கச் சென்றதாகவும், அதிகாலையில் பிரியாதன் கஞ்சா போதையில் மண் வெட்டியைக் கொண்டு சரமாரியாக கழுத்து, தலை பகுதியில் வெட்டியதில் பாலமுருகன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மகனை கொலை செய்த தந்தை பிரியாதன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story