சர்ச் அருகே Lab... தம்பதிக்கு ஃபாதர் அனுப்பிய திகில் வீடியோ - அதிர வைக்கும் நியூட்டன் பின்னணி

x

ஆங்கில படம் போல் சர்ச்சை ஒட்டியுள்ள வீட்டில் லேப் அமைத்து பாதிரியார் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட தம்பதிகளின் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள கக்காரமபட்டியை சேர்ந்த ஆறுமுக கிருஷ்ணன் வசந்தா தம்பதி. ஆறுமுக கிருஷ்ணன் கட்டிட கான்ட்டிராக்டாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தேவாலயம் நடத்தி வரும் பாதிரியார் நியூட்டன் டேவிட் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நியூட்டன் டேவிட் குழந்தைகள் மற்றும் முதியோருக்கான காப்பகம் தொடங்க உள்ளதாகக் கூறி இருக்கிறார். இதற்கான பணம் முப்பது கோடி வரை அமெரிக்காவில் இருந்து வர இருப்பதாகவும் கூறி ஆறுமுக கிருஷ்ணனிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் ரூ 68 லட்சம் வரை வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.ஆறுமுக கிருஷ்ணன் கொடுத்த பணத்தைக் கொடுத்த போது ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ 15 கோடி தங்களது தொண்டு நிறுவனத்திற்கு வந்து இருப்பதாகக் கூறி அதற்கான பாண்டு பேப்பர்களை கொடுத்து இருக்கிறார். பின்னர் ரிசர்வ் வங்கி இருந்து ரூ 300 கோடி வர இருப்பதாகக் கூறி தம்பதிகளை நம்ப வைத்து இருக்கிறார். ஆனால் பணம் கைக்கு வராததால் நியூட்டன் டேவிட்டிடம் தம்பதிகள் தொடர்ந்து கேட்டு வந்து இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்