"தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர்"..

x

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பெயரை சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Vovt

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட உமரிக்காட்டில், திருநெல்வேலி தெக்ஷ்ண மாற நாடார் சங்கத்தின் 60வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் 2023-2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிக்க, தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை மற்றும் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்டுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது எனவும் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்