புகாரை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் - திமுக நிர்வாகி மீது புகார்

x

தூத்துக்குடியில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி, கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், சாயர்புரத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கண்ணன் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிய கண்ணன், திருமணம் செய்ய வற்புறுத்தினால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், புகாரை வாபஸ் பெறக்கோரி அவருக்கு கண்ணன் உள்ளிட்ட சில திமுக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்