திருவொற்றியூரில் சுகாதார சீர்கேட்டால் மூதாட்டி பலி
திருவொற்றியூரில் குப்பம் பகுதி, மயானம், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகள் குவிந்தும் கழிவுநீர் தேங்கியும் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடால், அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 29ம் தேதி அப்பர் நகர் பகுதியில் திடீரென பத்து பேருக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்களில் தொடர்ந்து ஆறு நாட்கள் ஆகியும் உடல்நலம் தேறாத 'தேசப்பற்று' என்ற மூதாட்டி, ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவசர அவசரமாக அப்பர் தெரு பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். ஒரு உயிர் போன பின் தான் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story