சுத்தியலால் அடித்து உடைத்து சம்பவம் - பதற வைக்கும் வீடியோ காட்சிகள்
திருவாரூர் மாவட்டம் சண்ணாநல்லூர் அருகேயுள்ள காவாளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 65 வயது மூதாட்டியான இவர், கணவரை இழந்த நிலையில், தனது சிதிலமடைந்த வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர், மூதாட்டி வீடு கட்ட இருந்த நிலத்தை தன் பூர்வீக சொத்து எனக் கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில், இரு தரப்பும் மோதிக்கொண்ட நிலையில், காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருக்கின்றனர். இதனிடையே சம்பந்தப்பட்ட நிலத்தில் மூதாட்டி வீட்டை கட்டி முடித்த நிலையில், 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் மூதாட்டியின் புது வீட்டிற்குள் புகுந்த கண்ணன், வீட்டை சுத்தியலால் அடித்து நொருக்கி தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மூதாட்டியின் மகள்கள் மற்றும் பேரன்கள் தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இரு தரப்பு மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.