நடுரோட்டில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞன்.. தட்டி கேட்ட தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..
மன்னார்குடியில், இளம்பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை, இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேனியத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி, நேற்றிரவு தனியாக தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த விஜய் என்பவர், இளம்பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளம்பெண் தனது தந்தை மற்றும் சகோதரனிடம் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் விஜய்யை தாக்கியதாக தெரிகிறது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் விஜய் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கும் தகராறு ஏற்படவே புகாரின் பேரில் இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.