விவசாய சங்கத்தினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு..! திருவாரூரில் பரபரப்பு | Thiruvarur
மன்னார்குடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முழுமையாக சாலை பணி முடிவடையாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகவும், விதிமுறை மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story