பேரூராட்சி எடுத்த முடிவு - அதிர்ச்சியில் திருவாரூர் மக்கள்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஈசிஆர் சாலையோரம் உள்ள மங்கள் ஏரி அருகே நிரந்தரமாக குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், மங்கள் ஏரியை நம்பி 2000 ஏக்கர் வேளாண் நிலங்கள் உள்ளதாகவும், ஏரி அருகே குப்பைக்கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் மாசடையும் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகள் அருகே உள்ளதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Next Story