அன்று தந்தை பட்ட அவமானங்கள்.. இன்று சாதித்து காட்டிய பெண்.. நேரடியாக கலெக்டரை சந்தித்து செய்த செயல்

x
  • திருவாரூர் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்... இவரது மனைவி செல்வி வீட்டு வேகௌ செய்து வருகிறார்... இவர்களின் மகள் துர்காவுக்கு குடும்ப சூழலால் கடந்த 2015ம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் அலுவலக தற்காலிக ஊழியரான நிர்மல் குமார் என்பவருடன் திருமணம் செய்து வைத்த நிலையில், நிர்மல் குமார் துர்காவின் அரசு வேலைக் கனைவ அறிந்து ஊக்கமளித்துள்ளார்... இந்நிலையில் விடாமுயற்சியுடன் படித்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று எஸ்பிசிஐடி ஆக பொறுப்பேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இருப்பினும் தனது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய போது பெற்ற அவமானங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த துர்கா நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.
  • திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பணி நியமன ஆணையை சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிலையில் இன்று அவர் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவருக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்