வெளுத்தெடுத்த கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீடு - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்
திருவாரூர் மாவட்டம் சலிப்பேரி கிராமத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தில், ஒரு குடும்பமே நூலிழையில் உயிர்தப்பியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாலகிருஷ்ணன் என்பவரது தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் நூலிழையில் உயிர்தப்பினர். சலிப்பேரியில் மேலும் 16 வீடுகள் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story