டெல்டாவுக்கு வந்த சோதனை... இயற்கையின் தாண்டவம் - பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

x

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 700 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வண்டிக்கோட்டம், வடபாதி குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் நீரில் மூழ்கின. மூன்று நாட்களாக தண்ணீர் வடியாத நிலையில், பயிர்கள் அழுகி சேதம் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கோரையாரை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்