``என் கால ஒடச்சிட்டாங்க..'' - ``போலீசார் தள்ளியதில் காயம்'' - வீடியோ வைரல்
ஆரணி அருகே வீட்டு மனை தகராறு வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்ய சென்ற போது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சேவூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன், பாஸ்கரன் ஆகியோருக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. புகாரின் பேரில் பாஸ்கரை கைது செய்ய சென்ற போது, அவர் மாடிப்படியில் இருந்து நிலைதடுமாறி கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தன்னை கீழே தள்ளியதாக அவர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story